புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மும்பையை சேர்ந்த மாணவர்கள் பயன்படுத்தப்பட்ட காரின் பாகங்களை கொண்டு 1 லிட்டர் பெட்ரோலில் 300 கயோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் ஒரு காரை கண்டுபிடுத்துள்ளனர்.


பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில் மும்பை சோமையா கல்லூரி மாணவர்கள் சிலர் பயன்படுத்தப்பட்ட காரின் பாகங்களை கொண்டு ஒரு காரை தயாரித்துள்ளனர்.

மூன்று சக்கரத்துடன், புல்வெட்டும் எந்திரத்தின் என்ஜினைக்கொண்டு இயங்கும் இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 300 கிலோ மீட்டர் வரை செல்வதை அவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.

ஜூகாத் கண்டுபிடிப்பு என்ற புத்தகத்தை படித்த போது கிடைத்த எண்ணத்தை கொண்டு இந்த காரை உருவாக்கியதால் நாங்கள் அந்த காருக்கு 'ஜூகாத்' என்று பெயர் சூட்டியிருக்கிறோம். 60 கிலோ எடையுள்ள இந்த காரை தயாரிக்க சுமார் 4 லட்ச ரூபாய் செலவாகிறது என்றும் அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top