புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உடுவில் அம்பலவாணர் வீதியில் அமைந்துள்ள வீட்டில் பகல்வேளையில் யன்னலை உடைத்து உள்புகுந்த திருடர்கள், வீட்டில் உள்ள அலுமாரிகள் அனைத்தையும் உடைத்து சோதனையிட்டு வீட்டில் இருந்து தங்க நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கணவனும் மனைவியும் அரச அலுவலகர்கள் என்ற வகையால் தமது வேலைக்குச் சென்றதை சாதகமாக பயன்படுத்தி இந்த திருட்டு இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த மனைவி வீட்டின் கதவை திறந்து உட்சென்ற வேளையில் வீட்டினுள் இருந்த திருடன் மதில் பாய்ந்து தப்பி ஓடியுள்ளான்.

ஏற்கனவே வீட்டுக்கு வெளியே சைக்கிளில் காத்திருந்த ஒருவரை வீதியால் வந்த பொதுமகன் ஏன் நிற்கிறாய் என்று கேட்டதும் குறிப்பிட்ட நபர் அந்தப் பகுதியில் உள்ள ஒருவரின் பெயரை சொல்லிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top