2013 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான எண் ஜோதிடப் பலன்கள்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். கார் பழுதை சரி செய்வீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை
கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.
சகோதரங்களால் மகிழ்ச்சி கிட்டும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். என்றாலும் பிள்ளைகள் கோபப்படுவார்கள். சில நேரங்களில் உங்களை எதிர்த்து வாதாடுவார்கள். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். பிற்பகுதியில் புகழ், கௌரவம் உயரும்.
பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தம் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. கலைத்துறையினர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். கொஞ்சம் அலைந்தாலும் அதற்கான பலனை அடையும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 9, 12, 18, 21
அதிர்ஷ்ட எண்கள் : 2, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆலிவ்பச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்கள் கை ஓங்கும். புது வேலை கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். உறவினர் வீட்டு கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள்.
புது டிசைனில் நகை வாங்குவீர்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும்.
சகோதரங்கள் கோபப்பட்டாலும் நீங்கள் அனுசரித்துப் போவது நல்லது. மாதத்தின் மையப்பகுதியிலிருந்து புதிய கோணத்தில் யோசித்து பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். தட்டுத் தடுமாறி முன்னேறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 2, 7, 11, 15, 20
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, மயில்நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. ஆட்சியாளர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாக திரும்பும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வங்கிக் கடன் கிடைக்கும்.
மனைவிவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.
ஆனால் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவுகள் வரக்கூடும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். கண் எரிச்சல், காது வலி, பல் வலி வந்துப் போகும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். கன்னிப் பெண்களே! திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும்.
உங்கள் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் குறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 3, 9, 10, 21, 27
அதிர்ஷ்ட எண்கள் : 4, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள்.
மாதத்தின் முற்பகுதியில் எதிலும் ஒருவித படபடப்பு, பயம், எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், யூரினரி இன்பெக்சன் வந்துச் செல்லும். மனைவிவழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்கள் தீட்டுவீர்கள்.
வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். புதிய பயணத்தை நோக்கி பயணிக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 4, 8, 15, 17, 22
அதிர்ஷ்ட எண்கள் : 7, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். மகளின் பிடிவாதம் தளரும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இதமாகவும், இங்கிதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
அவ்வப்போது முன்கோபம், உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, வேனல் கட்டி வந்துச் செல்லும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப்பாருங்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் கட்சி தலைமையப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள்.
காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைத்துறையினர்களே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். நினைத்திருந்த காரியங்களை செயல்படுத்து மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 14, 15, 17, 23
அதிர்ஷ்ட எண்கள் : 3, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, கிரே
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எல்லோரும் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். வேற்றுமொழிக்காரர்கள் நண்பர்களாவார்கள். பதவிகள் தேடி வரும். உங்களை அவமானப் படுத்தியவரெல்லாம் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள்.
பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். மாதத்தின் பிற்பகுதியில் தந்தைக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன், செலவுகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுவது நல்லது. கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்பார்ப்புகளின்றி உழைக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 6, 8, 13, 17, 26
அதிர்ஷ்ட எண்கள் : 2, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம்வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி, வியாழன்
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் வேலை விரைவடையும். பூர்வீக சொத்து சேரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
புதிதாக வாகனம், டி.வி. , ஃப்ரிட்ஜ் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். நட்பால் ஆதாயம் உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துச் செல்லும். உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையே என வருந்துவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை அதிசயிக்கும் படி சிலவற்றை செய்வீர்கள். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் அதிகரிக்கும். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் கச்சிதமாக வேலையை முடிப்பார்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கால நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். அனுபவ அறிவை பயன்படுத்தி அமைதியாக காய் நகர்த்த வேண்டிய மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 2, 6, 7, 16, 25
அதிர்ஷ்ட எண்கள் : 3, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், இளம்சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், புதன்
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சொத்து சேர்க்கை உண்டு.
உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கட்டிட வேலைகளை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பள்ளி, கல்லூரி கால நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.
தாயாரின் உடல் நிலை சீராகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். தந்தையுடன் கருத்து மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மேலதிகாரி உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் பெருகும். திறமையால் தித்திக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 8, 23, 24, 26
அதிர்ஷ்ட எண்கள் : 5, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, புதன்
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த மாதத்தில் புதிய யோசனைகள் பிறக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். என்றாலும் சில சமயங்களில் முடிந்துவிடும் என நினைத்த விஷயங்கள் கூட அலைய வைத்து முடியும்.
வாயு தொந்தரவால் நெஞ்சு வலி, வயிறு உப்புசம், சிறுநீர் பாதையில் அலர்ஜி வரக்கூடும். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். அவ்வப்போது வீண் கவலைகள் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரை அனுசரித்துப் போங்கள். தன்னிச்சையாக எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம்.
வியாபார பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். பழைய அனுபவங்களால் சாதிக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 9, 1, 3, 6, 12, 21
அதிர்ஷ்ட எண்கள் : 4, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக