புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.



பலத்கமுவ கெஹல்பன்னல என்னும் இடத்தில் வாழ்ந்து வரும் அப்புலெத்தா உக்குமஹாத்மிய என்ற பெண்ணுக்கு 116 வயது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை கின்னஸ் உலக சாதனையாக பதியுமாறு அமெரிக்க மற்றும் பிரத்தானிய அதிகாரிகளிடம் சட்டத்தரணி ஹேமந்த சிடுகே கோரியுள்ளார்.

உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என்ற சாதனையை வழங்குவது குறித்து ஆராய கின்னஸ் அதிகாரியொருவரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தற்போது உலகின் வயது முதிர்ந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை, ஜப்பானைச் சேர்ந்த மியசோ ஒகாவா நிலைநாட்டியுள்ளார். இந்தப் பெண்ணுக்கு 114 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்தப் பெண்ணை விடவும் உக்குமஹாத்மிய என்ற இலங்கைப் பெண்ணுக்கு இரண்டு வயது அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1 கருத்து:

  1. பெயரில்லா28 மே, 2013 அன்று 12:22 AM

    இலங்கையில் உலகின் மிகவும் வயது கூடிய பெண்

    பதிலளிநீக்கு

 
Top