வில்பத்து சரணாலயத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் 7 சந்தேகநபர்கள் வனவள அதிகாரிகள் மற்றும் இராணுவ கமான்டோ படை அதிகாரிகளால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
வில்பத்து சரணாலயத்தின் பொம்பரிப்பு – பள்ளிவாசல்குளம் பகுதியில் நேற்றுபகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் புத்தளம் – எழுவங்குளத்தையும் மூவர் மினுவாங்கொடை பகுதியையும் சேர்ந்தவர்களாவர். இவர்களில் மினுவாங்கொடை மந்திரவாதி ஒருவரும் அடங்குகிறார்.
இவர்கள் புதையல் அகழ்ந்த இடம் தொல்பொருள் பெறுமதி வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் புதையல் அகழ பயன்படுத்திய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.