உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவரை கூலிப்படை மூலம் இன்ஸ்பெக்டர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அந்த காவல் துறை ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் மனித கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சஞ்சய் ராய். 12 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வரும் இவர் பயிற்சிக்கு வந்த ஒரு இளம் பெண்ணை காதலித்தார்.
ஆனால் அவர் காதலை அப்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராய் அப்பெண்ணின் குடும்பத்தாரை பழி வாங்க முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் அஜீத் ராய் மற்றும் ராகுல் ராய் ஆகியோருக்கு ரூ.2.5 லட்சம் பணம் கொடுத்து அப்பெண்ணின் உறவினரான மாஸ் என்னும் 13 வயது சிறுவனை சுட்டுக் கொல்லுமாறு கூறியுள்ளார்.
அதன்படி அவர்கள் சிறுவனை சுட்டுக் கொன்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இன்ஸ்பெக்டர் சொல்லித் தான் சிறுவனைக் கொன்றதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக