புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

7 மாத கர்ப்பிணி மனைவியை கொட்டும் பயங்கர மழையில் 40கிமீ காட்டு வழியில் தன் தோள்களிலேயே தூக்கிச் சென்று
வைத்தியசாலையில் சேர்த்துள்ளார் பழங்குடி நபர் ஒருவர். நம்ப முடியாத காரியம். ஆனால் செய்து காட்டியுள்ளார் கேரள காட்டுப்பகுதியில் வசித்து வந்த அய்யப்பன்.

ஆனால் இவரால் கருவறையில் இருந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.

கேரளாவில் கொன்னி காடுகளில் தன் மனைவி சுதாவுடன் வாழ்ந்து வந்த பழங்குடி இனத்தவராவார் இந்த அரிய மனிதர் அய்யப்பன். தேன் மற்றும் காட்டில் கிடைக்கும் பிற பொருட்களை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

இவர் தனது 7 மாத கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க கொட்டும் மழையில் காட்டுப்பாதையில் சுமார் 40கிமீ தோள்களிலேயே தூக்கிச் சென்றார்.

40 கிமீ இவ்வாறு கடினமான ஒரு காரியத்தைச் செய்த பிறகு அதிர்ஷ்டவசமாக ஜீப் ஒன்று கிடைத்துள்ளது. அங்கிருந்து பத்னம்திட்ட என்ற மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது நடக்கும்போது மணி மாலை 6 என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது அவருக்கு கடுமையாக இழுப்பும், வலிப்பும் ஏற்பட்டுள்ளது.

40கிமீ அயராமல் தூக்கிச் சென்றதால் மனைவி சுதா பிழைத்தார். ஆனால் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.

இருப்பினும் மனைவியின் உயிரைக் காப்பாற்ற 40கிமீ தோள்களில் தூக்கிச் சென்ற அந்த மனிதரின் செயல் மெய்சிலிர்க்கவைக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top