புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ரஷ்யாவில் இளம்பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



ரஷ்யாவை சேர்ந்தவர் எவ்கேனி ஷுடோவ்(40), இவர் சுமார் 65 பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றம் சாற்றபட்டவர். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பல இளம்பெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்.

பெரும்பாலும் 15 முதல் 25 வயது பெண்களையே குறிவைக்கும் இவர், கத்தியை காட்டி மிரட்டி அப்பெண்களின் இருப்பிடத்திலிருந்து அவர்களை மாடிக்கு செல்ல சொல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.இதுதொடர்பாக புகார் அளித்துவந்த பாதிக்கப்பட்ட பெண்களை விசாரித்ததில், இந்த அனைத்து குற்றங்களையும் செய்தது ஓரே நபர்தான் எனத் தெரியவந்தது.

இதைதொடர்ந்து எவ்கேனியை தீவிரமாக தேடிவந்த போலீசார், தற்போது அவரை கைது செய்துள்ளனர். சுமார் 65 பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top