அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அருகில் உள்ள வாட்டர்டவுன் என்ற பகுதியில் வசித்து வருபவர் பிரடெரிக் கே ஆவார். இவருக்கு தற்போது 97 வயது நடந்து கொண்டிருக்கின்றது.
இவர் பள்ளிப்பருவத்தில் வாட்டர்டவுன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்.
1934-ம் வருடம் பள்ளி இறுதி வகுப்பை முடிக்க வேண்டிய இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக அதற்கு முதல் வருடமே பாடசாலையிலிருந்து விலகினார்.
தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சென்ற பிரடெரிக், 1942-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார். காலாட்படையின் 24-வது பிரிவில் பசிபிக் பகுதியில் பணிபுரிந்தார்.
இரண்டாம் உலகப் போரில், தன்னுடைய சேவைக்காக இவர் வெண்கலப் பதக்கம் ஒன்றும் பெற்றார். ராணுவத்தில் பணிக்காலம் முடிந்ததும், மீண்டும் பழைய வேலைக்குத் திரும்பிய பிரடெரிக், இறுதியில் கணக்காளராக வேலையிலிருந்து ஓய்வும் பெற்றார்.
இவரது வீட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று, ஒரு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, அவர் படித்த வாட்டர்டவுன் உயர்நிலைப் பள்ளியில் இருந்து அவரது கல்விச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
80 வருடங்கள் பிறகு, அவருக்கு இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதனைத் தான் எதிர்பார்க்கவில்லை என்றும், மகிழ்ச்சியில் செயலற்று விட்டதாகவும் பிரடெரிக் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக