மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய் கிராமத்தில் 13 வயதான சிறுமியொருவரை வல்லுறுவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
54 வயதான வியாபாரியொருவரே நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை நேற்று செவ்வாய்கிழமை மாலையே கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை எறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக