புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஏழாம் வகுப்பு மாணவியை கற்பழித்துக் கொன்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தூரத்தில் உள்ள நாடியா மாவட்டம் மூங்கில் காட்டுப் புதருக்குள் 13 வயது மாணவியின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.

இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் அவள் கற்பழிப்புக்கு பின்னர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவள் படித்து வந்த பள்ளியின் அருகே போலீசார் விசாரித்தபோது, கடந்த திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த பிமல் சர்தார் (22) என்பவனுடன் கொட்டும் மழையில் அந்த மாணவி ஒரே குடைக்குள் நடந்து சென்றதாக சிலர் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிமல் சர்தாரை கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அவன் கூறியதாவது:-

சம்பவத்தன்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி, வழியில் பலத்த மழை பிடித்துக் கொண்டதால் காலியாக இருந்த ரெயில்வே ஷெட்டில் ஒதுங்கி நின்றுக் கொண்டிருந்தாள்.

குளிரால் அவள் நடுங்கிக் கொண்டிருந்ததை பார்த்து, 'என்னுடன் குடையில் வா... உன்னை வீட்டில் விடுகிறேன்' என்று கூறி அழைத்துச் சென்றேன்.

போகும் வழியில் எனது நண்பர்கள் இருவர் எங்களுடன் சேர்ந்துக் கொண்டனர். ஆள் நடமாட்டமில்லாத மூங்கில் காட்டின் அருகே சென்ற போது நானும் எனது நண்பர்களும் அவளை கற்பழித்தோம்.

நடந்ததை வெளியில் சொல்லி விடுவாளோ...? என்ற பயத்தில் 3 பேரும் சேர்ந்து அவளது கழுத்தை நெரித்துக் கொன்றோம்.

யாரும் பார்த்து விடாமல் இருப்பதற்காக பிணத்தை மூங்கில் புதருக்குள் தூக்குப் போட்டு விட்டு ஒன்றும் நடக்காததுபோல் இருந்து விட்டோம்.

இவ்வாறு அவன் கூறினான்.

அவனை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அவனுடைய நண்பர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top