கம்பளை குடமாக்கே பகுதியில் வசித்துவரும் 46 வயது மதிக்கத்தக்க பி.ஜானகிதேவி என்ற பெண் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 27ம் திகதியில் இருந்து இவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து இவர் கொழும்புக்கு ரயிலில் சென்றிருக்கலாம் என குடும்பத்தார் சந்தேகிக்கின்றனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான ஜானகி மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது உறவினர்கள் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன குறித்த பெண் தலவாக்கலை ராணியப்பு தோட்டத்தில் பிறந்து திருமணம் முடித்து கம்பளையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்கும் பொருட்டு கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக