புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணத்தில் மரணவீடு ஒன்றிற்கு போடப்பட்டிருந்த தகரக் கொட்டகையை அதன்மேல் ஏறி கழற்ற முயன்ற குடும்பஸ்தர் அதிலிருந்து தவறிவீழ்ந்து பரிதாபகரமாக
உயிரிழந்தார்.

நேற்று 5.45 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் கரம்பன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த முருகேசு சாந்தகுமார் (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கீழே விழுந்து படுகாயமடைந்த இவர் உடனடியாக ஊர்காவற்துறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்தார்.

யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பணிப்பின்பேரில் மேலதிக உடற் பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊர்காவற்துறைப் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டு பரிசோதனையை அடுத்து சடலம் இன்று காலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top