நடிகை மனோரமாவுக்கு நேற்று உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
68 வயதாகும் மனோரமாவுக்கு மூட்டு வலி ஏற்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்தார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, வீட்டில் வழுக்கி விழுந்து தலையில் அடிப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், அவருக்கு நேற்று இரவு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக