பிரிட்டனின் “பேஸ் ஒவ் சன்டர்லேண்ட்” அழகுராணி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவர் பமி ரோஸ். 20 வயதான பமி ரோஸ், ஆணாக பிறந்தவர். 15 வயது வரை சிறுவனாகவே வாழ்ந்தார் என்பது ஆச்சரியமானது.
ஆயிரத்துக்கு மேற்பட்பட்ட யுவதிகள் பங்குபற்றிய அழகுராணி போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தெரிவான பின்னர்தான் நேர்காணலின்போது தனது வரலாற்றை தெரிவித்தார் பமி.
ஆணாக பிறந்த பமி ரோஸுக்கு பெற்றோர் சூட்டிய பெயர் போல் விட்டன். ஆணாக பிறந்தபோதிலும் தான் பெண் தன்மையுடன் இருப்பதை அவர் உணர்ந்தார்.
அவர் நான்கு வயதானவராக இருந்தபோதே தனது உடல் தனக்கு பிடிக்கவில்லை என தனது தாயான ஜூலியிடம் கூறினாராம்.
15 வயதுவரை அவர் சிறுவன் போன்றே வாழ்ந்தார். எனினும் தான் பெண்ணாக வாழ்வது என அவர் தீர்மனித்தார். தலைமயிரை நீளமாக வளர்க்க ஆரம்பித்தார். பெண்களுக்கான ஆடைகளையே அணிய ஆரம்பித்த அவர் மேக் அப் செய்து கொண்டார்.
அவர் மாணவிகளைப் போன்று ஆடையணிந்து பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்தவுடன் பலர் கேலி செய்தனர். பாடசாலையில் மாணவிகள் குழுவுடனேயே அவர் சேர்ந்திருந்தார். தனது நண்பிகள் தனக்கு ஆதரவளித்தாலும் தன்னை முழுமையாக யாரும் புரிந்துகொள்ளவில்லை என்கிறார் பமி.
பின்னர் முழுமையான பெண்ணாக மாறுவதற்காக சத்திரசிகிச்சை செய்துகொள்ள அவர் தீர்மானத்தார். குரல் மாற்றத்திற்காகவும் மீசை வளர்வதை தடுப்பதற்காகவும் மார்பக வளர்ச்சிக்காகவும் அவரின் உடலில் ஹோர்மோன்கள் செலுத்தப்பட்டன.
19 வயதானபோது, போல் விட்டன் எனும் தனது பெயரை பமி ரோஸ் என அவர் மாற்றிக்கொண்டார். அவர் நடிகை பமேலா அண்டர்சன் போல் இருப்பதாக அவரின் நண்பியொருவர் கூறியதையடுத்து பமி எனும் பெயரை தெரிவுசெய்தாராம்..
எனினும் பலரும் தன்னை பெண்ணாக ஏற்கொள்கிறார்களா என்பது அவருக்கு சந்தேகம் இருந்தது. அதனால் அழகுராணி போட்டியில் பங்குபற்றத் தீர்மானித்த அவர் பேஸ் ஒவ் சந்தர்லண்ட் அழராணி போட்டிக்கு விண்ணப்பித்தார்.
இப்போட்டியில் எவ்வளவு தூரம் தன்னால் முன்னேற முடியும் என்று அறிவதற்கு விரும்பிய பமி ரோஸ் தான் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதை நடுவர்களுக்கு ஆரம்பத்திலேயே தெரிவிக்கவில்லை.
6 பேர் கொண்ட இறுதிச்சுற்றுக்கு தெரிவான பின்னர் அவர் தனது வரலாற்றை கூறியபோது நடுவர்கள் பெரும் ஆச்சரியமடைந்தனர்.
அழகுராணி போட்டியில் பமி ரோஸ் முடிசூடப்படவில்லை. எனினும் இறுதிச்சுற்றுவரை முன்னேறியமையே தனக்கு கிடைத்த பெரும் வெற்றியாகவும் அங்கீகாரமாகவும் கருவதாக அவர் கூறுகிறார்.
“இப்போட்டியின் முதல் சுற்றில் போட்டியாளர்களின் புகைப்படத்துக்கு எத்தனை “லைக்” கிடைக்கிறது என்பதிலேலேயே வெற்றி தங்கியுள்ளது.
உண்மையில் அழகான பல யுவதிகள் இதில் பங்குபற்றினர். எனக்கு முதல் நாளிலேயே 300 லைக் கிடைத்தது. அது அன்றைய தினத்தில் போட்டியாளர்கள் பெற்ற அதிகபட்ச புள்ளிகளில் அதுவும் ஒன்றாகும்.
நடுவர்களிடம் நான் ஆணாகப் பிறந்த உண்மையை கூறியபோது அவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பெண்ணாக நான் தோற்றமளிப்பதால் அவர்கள் அதை எதிர்பார்க்கவே இல்லை. எனினும் அவர்கள் மிக நட்புணர்வுடன் என்னை தொடர்ந்து போட்டியில் பங்குபற்ற ஊக்குவித்தனர்” என்கிறார் பமி ரோஸ்.
எவ்வாறெனினும், ஆணாக பிறந்து பின்னர் அழகுராணி போட்டியில் பங்குபற்றிய முதல் நபர் பமி ரோஸ் அல்லர். கடந்த வருடம் மிஸ் இங்கிலாந்து அழகுராணிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவான ஜெக்கி கிறினும் ஆணாக பிறந்தவர்.
கடந்த வருடம் மிஸ் யூனிவர்ஸ் கனடா போட்டியில் பங்குபற்றிய ஜென்னா தலகோவா பெண்ணாக பிறந்தவர் என்பது கண்டு பிடிக்கப் பட்டபின் போட்டியிலி ருந்து விலக்கப்பட்டார். இவ்விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பின்னர் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அவர் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்.
அப் போட்டியில் ஜென்னா அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். ஆனால் பமி ரோஸ் இறுதிச்சுற்றுவரை முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக