மர்மமான முறையில் நெஞ்சுப் பகுதியில் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் வீதியிலிருந்து பொலிஸாரால் குடும்பஸ்தர் ஒருவர்
மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் காங்கேசன்துறை வீதியில் சிவதொண்டர் நிலையத்திற்கு அருகில் இருந்தே இவ்வாறு ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இடம்பெற்ற இச்சம்பவத்தில் 37 வயதுடைய இராஜேந்திரம் திருகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவருக்கு அருகில் அவரது மோட்டார் சைக்கிளும் காணப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக