புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ் வலிகாமம் வடக்கிலுள்ள கீரிமலை கரும்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் வேள்வியைத் தடுக்குமாறு கோரி இளவாளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று மீளப் பெறப்பட்டுள்ளது.


தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினருக்கும் சுகாதார வைத்திய அதிகாரிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்தையின் போது இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய சுகாதார வைத்திய அதிகாரி தமது முறையீட்டை இன்று மீளப் பெற்றுக்கொண்டதாக இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top