புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சென்னை வங்கியில் ரூ.19 கோடி மோசடி வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்படும் சுகாஷ் சந்திரசேகரின் காதலியும் நடிகையுமான லீனா மரியா டெல்லியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சென்னைக்கு
அழைத்துவரப்பட்டார்.

நேற்று காலை 9 மணிக்கு அவரிடம் போலீஸ் வாக்குமூலம் பெற்றுள்ளது. ஆங்கிலம், மலையாளம் மட்டுமே தெரிந்த இவர் சுகாஸின் காதல் வலையில் எப்படி சிக்கினார் என்பதை போலீசிடம் விவரித்தார்…

கேரளாவில் பிறந்த எனக்கு சினிமா நடிகை ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. 5 மலையாளப் படங்களில் நடித்தேன், அப்போது சுகாஷ் என்னுடிய படங்களைப் பார்த்துவிட்டு என்னை போனில் தொடர்பு கொண்டார்.

அப்போது தான் ஒரு சினிமா டைரக்டர் என்று என்னிடம் அறிமுகம் செய்து கொண்டு அடிக்கடி போனில் பேசினார். தமிழ், இந்தி திரையுலகில் தனக்கு முன்னணி பிரமுகர்களைத் தெரியும் அவர்களிடம் பேசி எனக்கு சான்ஸ் வாங்கித் தருவதாகக் கூறினார்.

அதன் படி சென்னையில் முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஒருவரைச் சந்தித்தோம். அதன் பிறகு மும்பையில் மருத்துவமனை இல் அனுமதிக்கப்பட்டிருந்த டைரக்டரிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார்.

இப்படியாக அவர் மீது எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. அவ்ரை நான் காதலிக்கத் தொடங்கினேன். நான் அவரைப்பற்றி விசாரித்தபோது தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் மகள் வழிப் பேரன் என்றார். அதே குடும்பத்தில் திருமணம் செய்யப்போவதாகவும் கூறினார்.

நாங்கள் ஒன்றாகவே வாழ்ந்து வந்தோம். டெல்லியில் பண்ணை விட்டில் குடும்பம் நடத்தினோம். அப்போது போலீசார் என்னைக் கைது செய்தனர். அவர் மட்டும் சாமர்த்தியமாக தப்பிச் சென்று விட்டார்.

இவ்வாறு கூறினார் அவர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top