90 வயதுக்கு மேற்பட்டோருக்கான பளு தூக்கும் போட்டியில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்த பெர்லிஸ் (91) புதிய சாதனையை படைத்துள்ளார்.
2005-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 135 பவுண்ட் என்ற முந்தைய உலக சாதனையை 187.2 பவுண்ட் எடையை ‘பெஞ்ச் லிப்ட்டிங்’ முறையில் தூக்கி இவர் முறியடித்துள்ளார்.
தனது 60-வது வயதில் பளுதூக்கும் போட்டியில் களமிறங்கிய பெர்லிஸ், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான பளுதூக்கும் போட்டியில் 2009-ம் ஆண்டு மாநில அளவில் 181 பவுண்ட் எடையை தூக்கி சாதனை படைத்தார்.
தொடர்ந்து 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் 181 பவுண்ட் பளு தூக்கும் போட்டியில் உலக சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
அறுவை சிகிச்சை காரணமாக 2012-ம் ஆண்டு போட்டியில் பங்கேற்காத இவர், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 187.2 பவுண்ட் எடையை தூக்கி தனது முந்தைய சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக