புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் இன்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59.


சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்தார். இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து இறந்து போனார். மணிவண்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 50 படங்கள் டைரக்டு செய்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் இவரது சொந்த ஊர் ஆகும். பாரதிராஜாவிடம் 1979-ல் உதவி இயக்குனராக சேர்ந்தார். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓய்வதில்லை படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தை 1982-ல் முதன்முதலாக டைரக்டு செய்தார்.

இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல ஹிட் படங்களை டைரக்டு செய்துள்ளார்.

கடைசியாக சத்யராஜை வைத்து அமைதிபடை 2-ம் பாகத்தை ‘நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.’ என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார்.

நிழல்கள் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். காமெடி மற்றும் குணசித்திர வேடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். வில்லன், துள்ளாத மனமும் துள்ளும், குருவி, தம்பி, எங்கள் அண்ணா, பம்மல் கே.சம்பந்தம், மாயி, படையப்பா, கொடி பறக்குது, தாய்மாமன் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். இறுதி சடங்கு நாளை நடக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top