புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள செங்கலடியில் பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளியிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த திருமதி மதுரநாயகி தவராஜா வயது 63 என்றே பெண்ணே கத்திக்குத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

அடிவயிற்றில் கத்திக்குத்துக்குள்ளான இந்தப் பெண்மணி அதிகாலை 1.30 மணியளவில் செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவசர மேலதிக சத்திர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டதாக செங்கலடி பிரதேச வைத்தியசாலை கடமைத் தாதிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top