உத்தரப்பிரதேச மாநிலம் கரஹ்கோல் கிராமத்தில் மகனைக் காதலித்த பெண்ணை தீ வைத்து எரித்த குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரஹ்கோல் என்ற கிராமம் உள்ளது. இங்கு மஞ்சு என்ற பெண் ரஞ்சித் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இதற்கு ரஞ்சித்தின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து ஊர் பஞ்சாயத்தையும் கூட்டினர். பஞ்சாயத்தில், காதலர்களை சேர்த்து வைக்குமாறு மஞ்சுவின் தாய் கோரிக்கை வைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்தின் பெற்றோர், மஞ்சுவின் தாயாரை சரமாரியாக தாக்கினர். இதைப் பார்த்ததும் மஞ்சு ஓடிச்சென்று தாயை காப்பாற்ற முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் பெற்றோர், மஞ்சு மீது மண்ணெண்ணை ஊற்றி தீ் வைத்தனர். தீ மளமளவென்று பரவியது. அலறித்துடித்த மஞ்சு சம்பவ இத்திலேயே உடல்கருகி உயிரிழ்ந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சித்தின் தாய் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பஞ்சாயத்தார் முன்னிலையிலேயே இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக