புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட யாழ். வங்கி ஒன்றின் ஊழியரைத் தேடி யாழ் பொலிஸார் வலைவிரித்துள்ளதாக யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.


யாழ். நகரப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 46 இலட்சத்து 8550 ரூபாவை வாங்கி பணமோசடியில் ஈடுபட்டதுடன், குறித்த நபரை ஏமாற்றி வந்த யாழிலுள்ள வங்கி ஒன்றின் ஊழியரைத் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த வங்கி ஊழியர் வங்கியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸ் புலன் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி கூறினார்.

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறிய வங்கி ஊழியரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top