பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கில், அவரது நெருங்கிய நண்பரான சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
நடத்தப்பட்டது. இந்நிலையில், சூரஜ் பஞ்சோலியின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் இன்று மும்பை கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது...
அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஜியா கான் ஜூன் 3-ம் தேதி தற்கொலை செய்தார். ஆனால் 4 நாட்களுக்குப் பிறகு அவர் எழுதிய கடிதத்தை கண்டுபிடித்த அவரது தாயார், அதனை தவறாக பயன்படுத்துகிறார். ஜியா கான் தற்கொலைக்கு முன்னர் அந்தக் கடிதத்தை எழுதியிருக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த கடிதத்தை எனக்கு எழுதவில்லை.
எனது பெயரையும் அதில் குறிப்பிடவில்லை. அவரது தாயார் தன்னை பழிவாங்க முயற்சிக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, ஜாமீன் மனு மீதான விசாரணை 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சூரஜ் பஞ்சோலியிடம் மேலும் பல தகவல்களை பெற வேண்டியிருப்பதால் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நிராகரித்த கோர்ட், சூரஜ் பஞ்சோலியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக