புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நடிகை சமந்தா நடிகர் சித்தர்த்துடன் காதல் வயப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்தது இந்நிலையில் தான் சீக்கிரமே ஒரு குழந்தைக்கு தாய் ஆகணும்

  என்று ட்வீட் செய்துள்ளார் சமந்தா.

சமீபத்தில் சமந்தா - சித்தார்த் இருவரும் கோவில்களுக்கு பெற்றோருடன் சென்று சாமி கும்பிட்டனர். அதன் பிறகுதான் இவர்கள் காதல் விவகாரம் வெட்ட வெளிச்சமானது.

படவிழாக்களில் ஜோடியாக பங்கேற்கின்றனர். நெருக்கமாக போட்டோவுக்கும் போஸ் கொடுக்கிறார்கள். சமந்தாவுக்கு தற்போது தெலுங்கில் 5 படங்கள் கைவசம் உள்ளன. தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு திருமணம் நடக்கும் என தெரிகிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாய் ஆக ஆசை வந்துள்ளதாகவும் சமந்தா கூறியுள்ளார்.

இதுகுறித்து சமந்தா டுவிட்டரில் கூறியிருப்பதாவது,



'படப்பிடிப்பில் ஒரு குழந்தையை பார்த்தேன். அதை தூக்கி கொஞ்சினேன். பிஞ்சு விரலால் அக்குழந்தை என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டது. அக்குழந்தையை விட்டு என்னால் விலக முடியவில்லை. எனக்கு வயது ஆகிவிட்டது தெரிகிறது. எனக்கும் தாய் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு உள்ளது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top