செவனகல சூரிவெவ பிரதேசத்தில் 17 வயது யுவதியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நால்வரில் மூன்று பேரை செவனகல
பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த யுவதி தமது காதலனுடனும் அவரது நண்பர் ஒருவருடனும் வாவிக் கரையில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த சந்தேக நபர்கள் இளைஞர்கள் இருவரையும் அச்சுறுத்தி துரத்திவிட்டு யுவதியை பாழடைந்த வீடொன்றுக்கு கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளனர். பின்னர் யுவதியை வாகனமொன்றில் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 29, 25 மற்றும் 21 வயதுடையவர்கள் என்றும், இவர்களில் இருவர் திருமணமானவர்கள் என்றும் செவனகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நான்காவது சந்தேகநபரைத் தேடி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக