கோடீஸ்வரப் பெண்ணாக நடித்து பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து மேலிடத்து நபர்களை சட்டபூர்வமாக திருமணம் செய்து கோடிக்கணக்கான பணத்தையும்
சொத்துக்களையும் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரை களுத்துறை வடக்கில் பாணந்துறை குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
37 வயதான இப்பெண் பத்துப் பேரை இவ்வாறு மோசடி செய்து திருமணம் செய்துள்ளதாகவும் பத்துப்பேரில் வர்த்தகர்களும், இராணுவ மேஜர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இப்பெண் பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களைப் பிரசுரித்து திருமணமாகாத வர்த்தகர்களை வீட்டுக்கு வரச் செய்து அவர்களை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து உடனடியாக பதிவுத் திருமணம் செய்து, பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
பணம் பெற்ற பின்னர் பல்வேறு வகையில் பொருத்தமில்லை எனத் தெரிவித்து அந்நபர்களைத் தவிர்த்து விட்டு விவாகரத்து பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
சந்தேகநபரின் மோசடியில் சிக்கிய இருவர் பாணந்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு செய்து கொண்ட முறைப்பாட்டை அடுத்து இப்பெண்ணை கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கில் ஆடம்பர வீடொன்றில் தமது தாயுடன் வசிக்கும் பெண்ணின் மோசடிக்கு, தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.
பாணந்துறை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக