புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மகள் 'ஜீன்ஸ் பேண்ட்' அணிந்ததை விமர்சித்தவர்களை தட்டிக்கேட்ட தாயாரை பக்கத்து வீட்டினர் அடித்துக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், அலிகார் அருகேயுள்ள பன்னாதேவி பகுதியை சேர்ந்த பெண் கமலேஷ் துபே. இவரது இளம்வயது மகள் மேற்கத்திய பாணியில் மிடுக்காக உடையணிவதில் ஆர்வமுடையவராக இருந்தார்.

அவரை குடும்பத்தினர் வளர்க்கும் முறை சரியில்லை என்று பக்கத்து வீட்டில் வசிக்கும் பூலாவதி என்ற பெண் குறை கூறி வந்தார். கமலேஷ் துபே குடும்பத்தைப் பற்றி ஊர் முழுவதும் தவறான கருத்துகளையும் பரப்பியுள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாத கமலேஷ் துபே, என் குடும்பத்தைப் பற்றி ஏன் எப்போது பார்த்தாலும் கேவலமாக பேசுகிறாய்? என்று தட்டிக் கேட்டார்.

பூலாவதிக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் சண்டையில் சேர்த்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் திடீரென்று துப்பாக்கியை எடுத்து கண் மூடித்தனமாக சுட்டார். ஆவேசமாக ஓடிச் சென்று கமலேஷ் துபேவின் தலையில் துப்பாக்கியின் அடிக்கட்டையால் ஓங்கி தாக்கினார்.

இதில் மண்டை பிளந்த நிலையில் கமலேஷ் துபே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்த பொலிசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top