புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருப்பூர் மாவட்டத்தில்  நேற்று திருமணம் நடக்கும் தருணத்தில் மணப் பெண்ணை சிலர் காரில் கடத்திச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, சாந்தா வீதியை சேர்ந்தவர் 24-வயதான இந்துமதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் போது பீளமேடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

படிப்பு முடிந்த பின், சதீஷ்குமார், சென்னையில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இருவரும் சென்னை, ராயபுரத்தில் பதிவு திருமணம் செய்தனர். இந்துமதி தனது வீட்டுக்கு திரும்பினார்.

இந்த நிலையில், சதீஷ்குமார் தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, இந்துமதியின் வீட்டுக்கு சென்ற சதீஷ்குமாரின் பெற்றோர், பெண் கேட்டனர். இந்துமதியின் பெற்றோரும் சம்மதம் கூறினர்.

நேற்று காலை 6:30 முதல் 7:30 மணிக்குள், கோவை மருதமலையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதன்படி, இரு வீட்டாரும் மருதமலைக்கு வந்தனர்.

அப்போது மணமகன் சதீஷ்குமாரை பார்த்த, பெண் வீட்டாரை சேர்ந்த சிலருக்கு மணமகனை பிடிக்கவில்லை.

திடீரென, இந்துமதியை அழைத்துக்கொண்டு, ஒரு காரில் சென்றனர். அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் வடவள்ளி போலீசில் இந்துமதியை கடத்திச் செல்வதாக தகவல் தெரிவித்தனர்.

வடவள்ளி போலீசார், காரின் பதிவெண்ணை கொண்டு, அவ்வழியே வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அதற்குள்ளாக கார், அவர்களை கடந்து சென்றது. இதுகுறித்து கோவை மாநகர போலீசாருக்கு, வடவள்ளி போலீசார் தகவல் கொடுத்தனர்.

அப்போது, கோவை ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்பாக, இந்துமதியுடன் சென்று கொண்டிருந்த காரை, போலீசார் மடக்கினர். பின் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு எஸ்.ஐ., கோமதி, மணப்பெண் இந்துமதியிடம் விசாரித்தார். "நாங்கள் இருவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே, பதிவு திருமணம் செய்து விட்டோம். சதீஷ்குமாரைத்தான் நான் திருமணம் செய்வேன்" என இந்துமதி கூறினார்.

பின்பு மணமகளின் உறவினர்களை போலீசார் சமாதானம் செய்தனர். தொடர்ந்து இருவருக்கும் மருதமலையில் திட்டமிட்டபடி திருமணம் நடந்து முடிந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top