நடிகை ஜியாகான் தற்கொலை தொடர்பாக காதலன் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை ஜியாகானின் தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணமாக கூறப்பட்டுள்ள நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதன்படி ஜியாகான் கர்ப்பமாகி, கருக்கலைப்பு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நடிகை ஜியாகான் சூரஜ் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர் நட்சத்திர தம்பதியான ஆதித்யா பாஞ்சோலி-கரீனா வகாப்பின் மகன் ஆவார். சூரஜும் ஜியாகானும் நெருங்கி பழகி வந்தனர். திடீர் என்று காதல் முறிவு ஏற்பட்டது. சூரஜுடனான காதல் பற்றி உயர்வாக கடிதத்தில் குறிப்பிட்ட ஜியாகான் அதன் பிறகு காதலன் ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து காதலன் சூரஜை போலீசார் கைது செய்தனர். ஜியாகானை ஏமாற்றியதை மறைக்க அவர் தற்கொலை செய்ததும் சூரஜ் தந்தையுடன் சென்று இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சூரஜை போலீசார் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இன்றுடன் அவர் காவல் முடிவடைவதைத் தொடர்ந்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.
இதற்கிடையே நடிகை ஜியாகான் தாய் ராபியா அமின்கான் தனது மகள் காதல் விவகாரம் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் சூரஜ் மீது கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
எனது மகள் சாவுக்கு சூரஜ்தான் காரணம். சூரஜை அவர் உயிருக்கு உயிராக காதலித்தாள். சூரஜிடம் இருந்து என்ன எதிர்பார்த்தாள் என்பது சூரஜிக்கு தெரியும். ஆனால் சூரஜ் ஏமாற்றிவிட்டார். இதனால் ஜியாகான் மனம் உடைந்து காணப்பட்டார். அவருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு சூரஜும், அவரது தந்தையும்தான் காரணம் என்று இருவரையும் நேரிலேயே எச்சரித்தேன்.
இருவரும் ஒருவரையொருவர் விரும்பினார்கள். ஒரு வருடமாக விருப்பப்படி வாழ்ந்தார்கள். அப்போது அவன் என் மகளை தாக்கி கொடுமைப்படுத்தினான். பலமுறை கற்பழித்தான். சூரஜ் தாக்கியதால் அவளது உடலில் காயங்கள் இருந்தன. அவள் வேதனையில் துடித்ததை நானே பார்த்து வருத்தப்பட்டேன். தற்போது நான் துயரத்தில் இருக்கிறேன். காயப்படுத்தப்பட்டு இருக்கிறேன். என் மகள் சாவுக்கு காரணமான அனைத்து ஆதாரங்களையும் போலீசிடம் கொடுத்து இருக்கிறேன்.
இவ்வாறு ராபியா கூறினார்.
ஜியாகான் எழுதிய கடிதத்தில் தன்னை சூரஜ் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கர்ப்பத்தை கலைத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் தெரிவித்த தகவல்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். இது தற்கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரஜ் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

0 கருத்து:
கருத்துரையிடுக