வீதியில் மஞ்சள் கடவையை கடக்க முயன்ற கர்ப்பிணி பெண்ணொருவர் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் குறித்த பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, அரசடி சந்தியிலுள்ள மஞ்சள் கோட்டின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கறுவப்பங்கேணியில் வசித்து வரும் விஜிதா என்பவரே காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக