புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ராஜஸ்தானி்ல் இளம் பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகேயுள்ள பையா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிரிபரம். இவரது மகளுக்கு, அதே ஊரைச் சேர்ந்த, சவாய் ராம் என்ற இளைஞரை, திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கான, நிச்சயதார்த்தமும் நடந்தது.

ஆனால், சவாய் ராம் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பது கிரிபரமுக்கு தெரியவந்தது. இதையடுத்து சவாய் ராமை, மருமகனாக ஏற்க மறுத்த அவர், வேறு ஒரு இளைஞருடன், தன் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சவாய் ராமின் பெற்றோர், கிராம பஞ்சாயத்தில் புகார் செய்தனர். பஞ்சாயத்தை சேர்ந்த பெரியவர்கள், கிரிபரமை அழைத்து, ஏற்கனவே நிச்சயித்தபடி, சவாய் ராமைத் தான், உங்கள் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். மறுத்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்தனர்.

ஆனால் கிரிபரம் தன் நிலையில் உறுதியாக இருந்தார். இதையடுத்து பஞ்சாயத்தார் ஆலோசனை நடத்தினர். இதில் பஞ்சாயத்து முடிவை ஏற்க மறுத்த, கிரிபரம், அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

இதன்படி மூன்று பேருக்கும், செருப்பு மாலை அணிவித்து, தெருவில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இச்சம்பவம் ராஜஸ்தானில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top