புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரித்தானியாவிலுள்ள தம்பதி ஒன்றுக்கு நான்கு குழந்தைகள் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.

இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என நான்கு குழந்தைகள் Sharon and Julian, என்ற தம்பதிகளுக்கு பிறந்துள்ளன.

இந்த நான்கு குழந்தைகளும் 11 வாரங்களுக்கு முன்பே குறை பிரசவத்தில் பிறந்ததால், மருத்துவர்களின் கண்காணிப்பில் இதுவரை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தனர்.

James,Joshua,Lauren and Emily என்று நான்கு குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த நான்கு குழந்தைகளும் பூரண நலத்துடன் இருப்பதால் அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக் சென்றுள்ளனர்.

நான்கு குழந்தைகளையும் மருத்துவமனையில் 11 வாரங்கள் கண்காணிக்க இந்த தம்பதிகள் £40,000 செலவழித்தாக கூறினர்.

குழந்தைகள் பிறக்கும்போது ஒவ்வொன்றும் 907 கிராம் எடையே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான குழந்தைகள் உலகில் 70 மில்லியன்களுக்கு ஒரு குழந்தைதான் பிறக்கும் என ஆய்வு கூறுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top