புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணம் மாதகல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இரத்தினம் வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிப பெண்மணியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பிறவியிலேயே கண் பார்வையற்ற இவர், இன்று அதிகாலை கிணற்றடிக்குச் செல்லும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் காலை 6.30 மணியளவில் இவரைத் தேடிப் பார்த்த போது இவர் கிணற்றுக்குள் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்தனர்.

மரண விசாரணையை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top