புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடன ஆசிரியருக்கு உறவினர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் பிரபல தனியார் பள்ளியொன்று உள்ளது.


கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு இந்த பள்ளியில் சிறுவர்-சிறுமிகளுக்கான நடனப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இங்கு நடனம் கற்பதற்காக வந்த 3 வயது சிறுமியிடம் நடன ஆசிரியர் அஜய் என்பவன் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்தான்.

வகுப்பு முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் இச்சம்பவம் பற்றி அந்த சிறுமி தாயாரிடம் கூறி அழுதாள். இதனையடுத்து, அப்பள்ளிக்கு உறவினர்களுடன் சென்ற சிறுமியின் பெற்றோர் நடன ஆசிரியரை பிடித்து ‘தர்ம அடி’ கொடுத்தனர். பின்னர், அவனை பொலிசில் ஒப்படைத்தனர்.

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றப்பிரிவின் கீழ் அவனை பொலிசார் இன்று கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top