இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக இலங்கை யுவதிகளை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவே உபுல் என்பவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சிங்கப்பூரில் சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபடும் முக்கியஸ்தர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை ஐந்து பெண்களை அழைத்துச் சென்று பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள் தப்பிச் சென்று சிங்கப்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மற்றுமொரு நபர் பற்றிய தகவல்களையும் அந்நாட்டு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அளுத்கம சம்பத் என்பவரே இவ்வாறு இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் நாடு திரும்பியுள்ளதாக தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 டொலர்கள் மட்டுமே வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக