புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய
பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த சூப்பர் கணனியை உருவாக்கியுள்ளனர்.

டியானி 2(Tianhe 2) என பெயரிடப்பட்டுள்ள இந்த கணனியின் வேகம் நொடிக்கு 33.86 பெடாஃப்லாப்(Petaflap) ஆகும்.

அதாவது நொடிக்கு 33,860 லட்சம் கோடி கணக்குகளைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தது.

மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது, சந்திரன் போன்ற மற்ற கிரகங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட மிகப்பெரிய அளவிலான அறிவியல் திட்டங்களைச் செயல்படுத்த இந்த சூப்பர் கணனி உதவும்.

மேலும் இந்த கணனியை கொண்டு மிக கடினமாக கணக்குகளை கூட துல்லியமாக செய்து முடிக்கலாம்.

இதுவரையிலும் அமெரிக்க எரிசக்தி அமைச்சகத்தின் தயாரிப்பான டைட்டன் என்ற கணனி தான், இதுவரை உலகின் அதிவேக சூப்பர் கணனியாக கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top