புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரான்சில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஈஃபிள் டவரிலிருந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபர் ஒருவர் தன்னை ஹெலிகாப்டர் மூலம் படம் பிடிக்கவேண்டுமென கூறியதும், இந்த தற்கொலை முயற்சி சம்பவத்தால் சுமார் 2
மணிநேரங்களுக்கு சுற்றுலா பயணிகள் காத்திருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகப்புகழ் பெற்ற ஈஃபிள் டவர் மீது 30 வயதுடைய நபர் ஒருவர் ஏறினார். மிக சாதாரண விதத்தில் உடையணிந்திருந்த அவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலிருந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் முதலில் அங்கிருந்த சுற்றுலாப்பயணிகளை அப்புறப்படுத்தினர்.

இரண்டு மணி நேரம் மேலே இருந்து, இறந்துவிட போவதாக மிரட்டிய நபரை போலீசார் சமாதானமாக பேசி கீழே இறங்க வைத்தனர்.

கீழே இறங்கிய அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவன் போலந்து நாட்டை சேர்ந்தவர் என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இந்த தற்கொலை முயற்சி காரணமாக, ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஈஃபிள் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் தன்னை ஹெலிகாப்டரில் வந்து படம் பிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top