பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இன்டர்நெட் மூலம் ‘சாட்’ செய்து திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணம் முடிந்த பிறகு தனது கணவனுக்கு ஏற்கனவே மனைவியும் ஒரு மகனும் இருப்பதை அறிந்த அந்த பெண், அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். விவாகரத்து வழக்கை தொடர்ந்த பின்னர் அந்த பெண் அமெரிக்காவுக்கு சென்று விட்டார்.
தன்னுடன் வாழாமல் பிரிந்து சென்ற மனைவியை அவமானப்படுத்தி பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பெண்ணின் பெயரால் புதிய ‘ஈ மெயில் ஐ.டி.’ யை உருவாக்கி அவரது ஆபாச படங்களை நந்தகுமார் ஜெய் இன்டர்நெட்டில் பரவ விட்டார்.
‘என்னுடன் உறவு வைத்துக் கொள்ள இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்’ என்று மனைவியின் கைபேசி எண்ணையும் விளம்பரம் செய்து தனது வன்மத்தை அவர் வெளிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரையடுத்து ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் பெங்களூரில் அந்த வாலிபரை கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக