தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகை ஜியாகான் எழுதிவைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறுபக்க தற்கொலைக் கடிதம் அந்நடிகையின் கையெழுத்தாக இல்லாமல் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
காதலரால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 'நிசப்த்' மற்றும் கஜினி-2 புகழ் நடிகை ஜியாகான் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். இத்தற்கொலை தொடர்பாக, நட்சத்திரத் தம்பதிகள் ஆதித்ய பாஞ்சோலி, ஜரீனா வஹாப் ஆகியோரின் புதல்வரான சூரஜ் பஞ்சோலி என்பவர் ஜியாகானின் காதலர் என்று காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.
ஜியா கான் தன் காதலர் சூரஜ்ஜுக்கு இறப்பதற்கு முன்பு எழுதியதாகச் சொல்லப்படும் ஆறுபக்கக் கடிதத்தில், காதலரின் நம்பிக்கைத் துரோகம், கருக்கலைப்பு ஆகிய விவரங்கள் காவல்துறைக்குக் கிடைத்தன.
இதற்கிடையில், சூரஜ் வீட்டைச் சோதனையிட்டபோது மேலும் ஐந்து காதல் கடிதங்கள் - ஜியாகான் எழுதியது - கிடைத்ததாகவும், முந்தைய தற்கொலைக் கடிதத்துடன் இந்த ஐந்து காதல் கடிதங்களில் காணப்படும் கையெழுத்து மிகவும் வேறுபட்டு இருப்பதாகவும் கண்டறிந்து காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
எந்தக் கடிதம் உண்மையானது என்பதையும், இதிலிருக்கும் குழப்பமென்ன என்பதையும் காவல்துறை ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.

0 கருத்து:
கருத்துரையிடுக