புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அல்வர் போலீஸ் நிலையத்தில் 15 வயது இளம் பெண்ணின் தந்தை நேற்று ஓர் புகார் மனுவினை அளித்தார்.


‘எனது மகளுடன் ‘பேஸ் புக்’ மூலம் பழகிய அல்வர் பகுதியை சேர்ந்த சமீர் குமார் என்பவன் சில மாதங்களுக்கு முன்னர் தனிமையை பயன்படுத்தி அவளை கற்பழித்து விட்டான்.

இந்த காட்சிகளை செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்துக்கொண்ட அவன், அதை வைத்தே என் மகளை தொடர்ந்து பயமுறுத்தி உறவு வைத்துக்கொண்டான்.

தற்போது அந்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளான். அதை இணையதளத்தில் பார்த்த எங்கள் உறவினர் இந்த தகவலை என்னிடம் கூறினார்.

மைனர் பெண்ணை ஏமாற்றி, மிரட்டி, கற்பழித்து, அந்த காட்சிகளை இணைய தளத்திலும் பரப்பிய சமீர் குமாரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top