புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பழங்குடியின பெண் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ஜகத்பூர் செல்லும் ஏ.சி. பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.


அதிகாலை 3 மணியளவில் கட்டக் அருகே பஸ் வந்தபோது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

தன்னிலை மறந்து தூங்கிக் கொண்டிருந்த பழங்குடியின பெண்ணின் வாயை துணியால் பொத்திய பஸ்சின் கண்டக்டர் சுசந்தா ஹெம்ப்ராம் என்பவன் அவரை கற்பழித்தான்.

இதையடுத்து, கட்டக் மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். பஸ் கம்பெனிக்கு சென்று ஹெம்ப்ராமை கைது செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ நடந்த பஸ்சின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில போக்குவரத்து துறை கமிஷனர் சுரேந்திர குமார் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top