புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மலேசியாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும், வட்டகொடை தோட்ட தமிழ் யுவதி குறித்து, மலேஷிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என மத்திய மாகாண சபையில் தனிநபர் பிரேரனை ஒன்று
முன்வைக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபையின் நேற்றைய அமர்வின் போது, ஜ.தொ.கா செயலர், ம.மா.ச.உறுப்பினர் முரளி ரகுநாதன் இந்த தனி நபர் பிரேரணயை தெரிவித்துள்ளார்.

ரோகினிதேவி எனும் குறித்த யுவதி தனது குடும்ப கஸ்ட நிலையை கருதி கொழும்பில் ஒரு மாதம் வேலை செய்து விட்டு மலேசியா சென்றுள்ளார். அதன்பிறகு தனது வீட்டாருடன் தொடர்பை ஏற்படுத்திய ரோகினிதேவி தனக்கு ஏதோ பிரச்சினை இருப்பதாக அறிவித்துள்ளார்.

அதன் பிறகு கடந்த 13ம் திகதி மலேசியாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான பல மர்ம மரணங்கள் வெளிநாட்டில் இருந்து தகவல்களாக எமக்கு கிடைக்கப் பெறுகின்றன.

இதை நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்த அரசிற்கு பொறுப்புக் கோரும் கடமை இருக்க வேண்டும். இந்த நாட்டின் பிரஜை வெளிநாட்டில் கஸ்டத்துக்குள் உள்ளாக்கப்பட்டால் அங்கே உள்ள இலங்கை வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு அதை கவனிக்கும் பணி இருகின்றது.

ஆகையினால் இந்த சபைத் தலைவர் இதை கவனத்திலெடுத்து ரோகினிதேவியின் மர்ம மரணம் குறித்து இலங்கை அரசு, மலேசிய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என முரளி ரகுநாதன் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top