புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தமிழ் சினிமாவை இதுவரை கவ்விக் கொண்டிருந்த மசாலா சூதுகள் விடைபெறும் ’நேரம்’ வந்துவிட்டது.
பஞ்ச் டயலாக், பறந்து பறந்து அடிக்கும் சண்டை,
குத்துப்பாட்டு போன்ற வெத்து வேட்டுக்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதுசா எதாவது சொல்லுங்க பாஸ் - இது தான் இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களின் வேட்கை.

அந்த வரிசையில் முற்றிலும் புதுமுகங்களுடன், இதுவரை தமிழ் சினிமா சொல்லத் தயங்கிய சங்கதியை செல்லுலாயுடு சபைக்கு கொண்டு வரும் படமாக தயாராகிறது சிநேகாவின் காதலர்கள்.

நட்பு – காதல் – காமம் இவற்றினூடாக பயணப்படும் ஒரு இளம் பெண்ணின் ரகசிய உலகை அவளே சிநேகத்துடன் பகிர்ந்து கொள்ளும் படம் இது.

ஆண்கள் கோலோச்சும் உலகத்தில், உறவுகளுக்குள் தன்னைத் தொலைத்து விடாமல் தன் சுயத்தைக் கண்டறிய/ காத்துக் கொள்ளப் போராடும் 21ம் நூற்றாண்டுப் பெண் சிநேகா.

தமிழ்ச் சமூகத்தின் காதல் பற்றிய பழைய கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி ‘காதல்’ என்பதற்கான புதிய அர்த்தங்களை எழுதிப்பார்க்கிறாள் அவள். ஆண் – பெண் உறவுகளை பெண்களின் பார்வையில் பேச முற்படுகிறது ‘சிநேகாவின் காதலர்கள்’.

மற்றபடி நடிகை சிநேகாவுக்கும் இந்தக் கதையில் இடம் பெறும் சிநேகாவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் இல்லை. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அவரே ஒரு குட்டி கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவும் கூடும்.

துணிச்சலான சிநேகா, அவரது வாழ்வில் கடந்து செல்லும் 4 இளைஞர்களின் பாத்திரம் மற்றும் முக்கிய பாத்திரங்களுக்கான தெரிவு துரிதமாக நடைபெற்று வருகிறது.

பாடல்களுக்கான இசைக் கோர்ப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க, யூன் இறுதியில் கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடங்கி, மதுரை பெங்களூர்கள் வழியாக ஒகஸ்டில் படப்பிடிப்பு முடிவடைகிறது.

தமிழன் திரைப்பட நிறுவனம் சார்பாக, தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் அளவான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க அவருடன் இணை தயாரிப்பாளராக கரம்கோர்க்கிறார்.

கொலிவுட்டின் பிரபல பத்திரிக்கையாளரும் விமர்சகருமான முத்துராமலிங்கம் இயக்குனராக களமிறங்குகிறார். இவர் பாலாவின் பிதாமகன் பட வெற்றிக்கு உழைத்து, பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைக்கு முக்கியத்துவம் உள்ள இசையில் புதிய ஒரு அனுபவத்தைக் கொடுக்கவல்ல எட்டுப் பாடல்கள் இடம்பெறும்.

இப்படத்திற்கு அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் இரா.ப்ரபாகர் இசையமைக்கிறார். பாடல்கள் நெல்லைபாரதி. தயாரிப்பு நிர்வாகம் அருள். மக்கள் தொடர்பு நிகில்முருகன்.

’சிநேகாவின் காதலர்கள்’ திரை தரிசனம் அநேகமாக டிசம்பராக இருக்கக்கூடும் என்கிறது படவட்டாரம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top