நடிகை ஜியாகான் தற்கொலை தொடர்பான வழக்கில் அவரது காதலன் சூரஜ் பஞ்சோலியை ஜூன் 27 வரை நீதிமன்ற காவல் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் சூரஜ் இன்று ஜாமீன் கோரியுள்ளார்
பிரபல இந்தி நடிகை ஜியா கான் காதல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த 3ம் தேதியன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியும் தானும் காதலித்ததாகவும், அவர் மூலம் ஒருமுறை கர்ப்பமடைந்து அவரது கட்டாயத்தின் பேரில் கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னை அவர் பலவகையில் சித்ரவதை செய்து துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் கடந்த திங்கட்கிழமையன்று இரவு சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார். அவரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் சூரஜ் பஞ்சோலி நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சூரஜ் பஞ்சோலியை ஜூன் 27 வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஆர்தர் ரோடு சிறையில் சூரஜ் பஞ்சோலி அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்த சூரஜ் இன்று தனக்கு ஜாமின் தர கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக