புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் சித்தாண்டிப் பகுதியில் கைது செய்யப்பட்ட இரும்பு வியாபாரியை சிறுமியின் சட்ட மருத்துவ அறிக்கை கிடைக்கும் வரை
நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைத்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் ஓடாவியார் வீதியைச் சேர்ந்த 59 வயதுடைய முகமது முஸ்தபா சபுதுல்லாஹ் என்ற இரும்பு வியாபாரி சித்தாண்டி பொது மயான காட்டுப்பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய நிலையில் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏம்.எம்.றியால் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்செய்த போது நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

குறித்த வியாபாரி தன்னை இதற்கு முன்பு இரண்டு முறை பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top