புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் கமலநாதன். இவர், ஸ்ரீபெரும்புதூர், வி.ஆர்.பி., சத்திரத்தில் குடும்பத்துடன் தங்கி பாணி பூரி வியாபாரம் செய்து வருகிறார்.


இவரது மனைவி மகாராணி. இவர்களுக்கு, அஜித்குமார், என்ற மகனும், 13வயது மகளும் உள்ளனர். அந்த சிறுமி அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார். மாலை நேரங்களில், தந்தைக்கு உதவியாக, பாணி பூரி கடையில், வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மோகன் 26, என்ற வாலிபர், பாணி பூரி கடைக்கு வந்து சென்ற போது, சிறுமியுடன் நட்பு ஏற்பட்டு,நாளடைவில் காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த, பெற்றோர், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த ஏப்ரல் மாதம், இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து, ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.

இருவரையும் மீட்ட காவல் துறையினர், இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி, சிறுமியை, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். கடந்த 2ம் தேதி, சிறுமி, மீண்டும் தனது காதலனுடன், வீட்டை விட்டு வெளியேறினார். ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர், கடந்த 5ம் தேதி, மைனர் பெண்ணை கடத்திச் சென்ற மோகனின் தந்தை முத்து, சித்தப்பா நந்தகோபால் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக இருந்த மோகன், சிறுமியை அழைத்துச் சென்று, அவரது வீட்டில் ஒப்படைத்தார். நேற்று காலை 9:00 மணிக்கு, சிறுமியின் பெற்றோர் அவரை அழைத்துக் கொண்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர்.

அவர்களை வழிமறித்த மோகன், காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டாம். மீறினால், தற்கொலை செய்து கொல்வேன் என, கூறி, தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை, உடலில் ஊற்றிக் கொண்டு கெஞ்சினார். அதையும் மீறி, அவர்கள் செல்ல முயன்றனர். அப்போது, மோகன், திடீரென தனது உடலில் தீ வைத்துக்கொண்டு, காதலியை கட்டி பிடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில், மோகன் சிறுமி அவரின் சகோதரர் சதீஷ்குமார் ஆகியோர் தீக்காயம் அடைந்தனர். இவர்கள் அனைவருக்கும், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top