புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தங்களின் ஒரு வயது குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த தம்பதியினர் பென்னி குமார்- மேரி சுஜா.

இந்த தம்பதிக்கு கடந்தாண்டு தனியார் மருத்துவமனையில் உடல் குறைபாடுடன் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லை, கண் பார்வையில்லை மற்றும் கை, கால்கள் செயல்படவில்லை.

இந்நிலையில் ஒரு வயதே ஆன குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்க கோரி, முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர்.

மேலும் அந்த மனுவில், தங்கள் குழந்தையின் இந்த நிலைக்கு மருத்துவமனை தான் காரணம் என்றும், குறித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top