புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வந்த இலங்கையர் ஒருவரின் உடலில் 32 தங்கத் தகடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


நேற்று (13) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு சுங்கப் பிரிவினர் அவரை கைது செய்தனர்.

அதன்பின் சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட போது உடம்பில் 32 தங்கத் தகடுகள் இருப்பது தெரியவந்ததாக சுங்க வருமான பிரிவு பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

வத்தளை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top