மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தலவாய் கிராமத்தில் மனைவிக்கு தீ வைத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது
கணவனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தலவாய்க் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 49 வயதான நடராசா சித்திரவேல் என்பவருக்கே இவ்வாறு நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நிதிபதி கே.சிவபாலசுந்தரம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
ஏறாவூர் தலவாய்க் கிராமத்தைச் சேர்ந்த இவருடைய மனைவியான தங்கராசா வனிதாவுக்கும்; இவருக்கும் இடையில் 2007ம் ஆண்டு யூலை மாதம் 15ம் திகதி குடும்பப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இவ்வேளையில் ஆத்திரமடைந்த குறித்த நபரின் மனைவி தான் தற்கொலை செய்யப் போவதாக கணவனை அச்சுறுத்தி தனக்குத்தானே மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார்.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குறித்த அவரது கணவன் மனைவிக்கு தீ மூட்டியுள்ளார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மனைவி மீது தீ வைத்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக இணங்காணப்பட்ட இவரை கைது செய்ததாக அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த ஏறாவூர் பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீமன்றத்தில் அவரக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையிலேயே மேற்படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்வரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

0 கருத்து:
கருத்துரையிடுக